இலங்கையில் டீசல், பெற்றோல் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், முச்சக்கர வண்டிகளின் கட்டணமும் அதிகரிக்கப்படுகிறது என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய புதிய கட்டணமாக முதல் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு 80 ரூபாயும், இரண்டாவது கிலோ மீற்றர் தூரத்திற்கு 60 ரூபாயும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்லும் இத்தருவாயில், விரைவில் தனியார் பேருந்து சேவைகளின் கட்டண அதிகரிப்பு விபரமும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.