மகிந்த, நாமல் உட்பட 17 பேர் வெளிநாடு செல்லத் தடை

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொழும்பில் ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ பகுதிகளில் தாக்குதலை நடத்தி, மக்களுக்கும் உடமைகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தியதாக, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தன்னையே முறைப்பாட்டாளராக பெயரிட்டு தாக்கல் செய்த வழக்கிலேயே இந்த வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஜொன்ஸ்ரன் பெர்னாண்டோ, பவித்திரா வன்னியாராச்சி மற்றும் காலி முகத்திடல் வன்முறைத் தாக்குதலை நேரடியாக வழிநடத்திய சனத் நிஷாந்த உள்ளிட்ட 17 பேருக்கு எதிராகவே வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles