மகிந்த தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க இடமளிக்க முடியாது – திஸ்ஸ விதாரன

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க இடமளிக்க முடியாது என அரசங்கத்திலிருந்து பிரிந்து தனித்துச் செயற்படும் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவிற்கு பொதுஜன பெரமுனவின் 66 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு வழங்குகின்றனர். பலமற்ற அரசாங்கத்தை அகற்றி உரிய நடவடிக்கைகளை எடுக்க ஜனாதிபதியும் தவறியுள்ளார். இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி குறிப்பிடும் இடைக்கால அரசாங்கம் பற்றிய கருத்துக்களில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles