சமூக வலைத்தள செயற்பாட்டாளர் கடத்தல்

இலங்கையில் மீண்டும் ஆட்கடத்தல் ஆரம்பமாகியுள்ளது. அரச தரப்பிற்கு எதிராக கருத்து தெரிவிப்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் நிகழ்வுகள் தொடரவுள்ளதையே நேற்று(01/04) இடம்பெற்ற கடத்தல் சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது.

இளம் சமுக வலைத்தள செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார என்பவர் இனம் தெரியாதோரால் நேற்று (01/04) கடத்தப்பட்டார். கம்பொலவில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, சீருடையின்றி வந்த சிலர், தாம் முகத்துவாரம் காவல் நிலையத்தில் இருந்து வந்திருப்பதாகக் கூறி கடத்திச் செல்லப்பட்டார்.

இருப்பினும் முகத்துவாரம் காவல்துறையினர் அப்படி யாரையும் கடத்தவில்லை என மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறையிட்டது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டதில், அனுருத்த பண்டார முகத்துவார காவல் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரிய வந்தது. “GoGotaHome2022” என்னும் பிரச்சாரத்தை மக்களிடையே பரப்பியதால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று முகத்துவார காவல் நிலையத்திற்குச் சென்று பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடியுள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles