நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளையும் அமைச்சரவையில் இணையுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை அமைச்சரவை அமைச்சர்கள் முழுமையாக பதவிகளைத் துறந்துள்ளதால், ஜனாதிபதி தற்காலிக அமைச்சரவை ஒன்றை அமைத்துள்ளார்.
இதில்,
தினேஷ் குணவர்த்தன – கல்வி அமைச்சு
ஜி.எல்.பீரிஸ் – வெளிநாட்டு அமைச்சு
அலி சப்றி – நிதி அமைச்சு
ஜொன்ஸ்ரன் பெர்னான்டோ – பெருந் தெருக்கள் அமைச்சு
ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதேவேளை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.