அவசரகால பிரகடனம் மூலம் அரசிற்கெதிரான போராட்டங்களை அடக்க முடியாது – சுமந்திரன்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால பிரகடனத்தால், அரசிற்கெதிராக பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தாம் பிறப்பித்துள்ள அவசரகால பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறவேண்டும் என தெரிவித்துள்ள சுமந்திரன், ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையை நிராகரிக்குமாறு சக பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles