ரஷ்யாவிற்கான விமான சேவைகளை நிறுத்தும் ஶ்ரீலங்கன் விமான சேவை

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிற்கான தனது விமான சேவைகளை இன்றிலிருந்து மறு அறிவித்தல்வரை இடை நிறுத்துகின்றது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால், ரஷ்யா மீது பல உலக நாடுகள் பாரிய பொருளாதார தடைகளை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக விமானங்களை காப்புறுதி செய்யும் நிறுவனங்களும் மொஸ்கோவிற்கான விமான சேவைகளுக்கு காப்புறுதி வழங்குவதை நிறுத்தியுள்ளன. இதனால் ஶ்ரீலங்கன் விமான சேவையால் மொஸ்கோவிற்கான சேவைகளை வழங்கமுடியாமல் போயுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் நிலைமைகளை தாம் தொடர்ந்து அவதானித்து வருவதாகவும், நிலமை சீரடையும்போது தாம் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பிப்போம் எனவும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles