தனது சொந்த வீட்டினை மக்கள் முற்றுகையிட்டதனைக் காரணம் காட்டி இலங்கையில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச.
அவசரகால நிலையின் பிரகாரம் இலங்கையில் சர்வாதிகார நிலை உருவாகும் அபாயம் தோன்றியுள்ளது.
அவசரகால நிலையின்போது பொதுமக்களுக்கு சாதகமற்ற பின்வரும் நடைமுறைகளை காவல்துறையினரோ, படையினரோ பின்பற்றக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
- பிடியாணையின்றிக் கைது செய்தல்
- 48 மணி நேரத்திற்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் தடுத்துவைத்தல்
- எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்தல்
- நீதிமன்றினால் கேள்வி கேட்க முடியாத உத்தரவுகளைப் பிறப்பித்தல்
- சட்டங்களை இடைநிறுத்தல்
- மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது எந்தவொரு வழக்குகளையும் தொடர முடியாது
