14ம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது

வரும் 14ம் திகதி (14/11/2018) காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவித்தலை ஜனாதிபதி விடுத்துள்ளார்.

உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை செவிமடுக்காது, ஜனாதிபதி 14ம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதாக அழைப்பு விடுத்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...