150 ஆவது தபால் தினத்தை முன்னிட்டு, இலங்கை தபால் திணைக்களம் இரண்டு புதிய முத்திரைகளை வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக இலங்கையை ஆட்சி செய்யும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரதமர் ஹரிணி அமரசூரியா மற்றும் வெளியறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்கள் பதித்த முத்திரையை இலங்கை தபால் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்த உடனேயே வழமையான அரசியல்வாதிகள் போல தேசிய மக்கள் சக்தியும் செயற்படுவதாக பரவலான விமர்சங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. தபால் திணைக்களத்தின் இந்த செயற்பாட்டினையும், NPP அரசையும் சமூக வலைத்தளங்களில் மக்கள் கேலி செய்து வருவதுடன், அநுரவின் முத்திரை ஏன் வெளியிடவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இருப்பினும் மிகமிக சொற்ப அளவிலான முத்திரைகள் 150 ஆவது தபால் தினத்தை சிறப்பிப்பதற்காக அச்சிடப்பட்டதாக அறிய முடிகிறது.