அதிகார மோகத்தின் உச்சக்கட்டம், மகிந்த அணியினர் பாராளுமன்றில் காடைத்தனம்

ஏற்கனவே நாம் குறிப்பிட்டதுபோன்று மகிந்த அணியினர் பாராளுமன்றத்தில் இன்று தமது காடைத்தனத்தைக் காட்டியுள்ளனர்.

சபாநாயகர் தனது ஆசனத்திற்கு வருவதற்கே காவல்துறையினரின் பாதுகாப்பு தேவைப்பட்டது. இருப்பினும் காவல்துறையினரின் மீதும் கதிரை மற்றும் புத்தகங்களைக்கொண்டு மகிந்த அணியினர் தாக்குதல் நடத்தினர்.

இதில் காவல்துறையினரும், மற்றும் ஐ.தே.க இன் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமர விக்ரமவும் காயமடைந்திருந்தனர்.

srilanka parliment violence mahinda rajapaksa

srilanka parliment violence mahinda rajapaksa

பின்னர் மிளகாய்தூள் கரைத்த நீரினை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊற்றினார்கள். கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டுவருவதைத் தடுக்க சோதனை நடவடிக்கைளை மேற்கொண்டிருந்த காவல்துறையினர், எவ்வாறு மிளகாய் தூளைக் கொண்டு செல்ல அனுமதித்தனர்?

srilanka parliment violence mahinda rajapaksa

மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்ட மகிந்த அணியினரின் கையில் ஆட்சி கிடைக்கப்பெற்றால் அப்பாவி மக்களின் நிலாமை எப்படி இருக்கும் என்று புரிந்துகொள்வதற்கு இன்றைய நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles