நீர்கொழும்பு கடற்பரப்பில் 90 பேர் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 90 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக கடற்படைப் பேச்சாளர் டினேஷ் பண்டார தெரிவித்துள்ளார். இருப்பினும் இவர்கள் எந்த நாட்டிற்கு செல்ல முயன்றார்கள் என்பது குறித்து அவர் எந்த தகவலும் குறிப்பிடவில்லை.

கைது செய்யப்பட்ட அனைவரும் கொழும்பு துறைமுக காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles