தொடரும் அவலம், இலங்கையில் 156பேர் உயிரிழப்பு

வேகமாகப் பரவிவரும் டெல்டா வகை கொரோனாவால் இலங்கையில் 156பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 156 பேரில், முப்பது வயதிற்கும், அறுபது வயதிற்கும் இடைப்பட்ட 35பேரும் உள்ளடங்குகின்றனர். டெல்டா வகை கொரோனா விரைவாக நுரையீரலைத் தாக்குவதால், இளவயதினரும் பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இலங்கை வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருவதால், அரசாங்கம் இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து திரவ ஒக்சிஜனை இறக்குமதி செய்யவுள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் ஒக்சிஜன் தட்டுபாட்டினை சமாளிக்க வெளிநாடுகளை மட்டும் முழுமையாக நம்பி இருக்க முடியாதென பிரதி சுகாதார சேவைகள் அதிகாரியான வைதியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

11ம் திகதி வரையிலாக காலப்பகுதியில், இலங்கையில் 5,620 பொதுமக்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொடர்பான புள்ளி விபரங்களை அரசாங்கம் குறைத்தே வெளியிட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி (JVP) உட்பட பிரதான எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles