உத்தியோகபூர்வ உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள்

இலங்கையில் நேற்று(09/05) ஆரம்பமான கலவரத்தால் இன்று(10/05) காலை ஆறு மணிவரையில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருட் சேதங்கள் தொடர்பான தகவல்களை இலங்கை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, எட்டு பொதுமக்கள் இந்த கலவரத்தால் உயிரிழந்துள்ளார்கள். இதில் ஆறு பேர் மேல் மாகாணத்திலும், இருவர் தென் மாகாணதிலும் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளடங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 47 வாகனங்கள் மற்றும் 38 வீடுகள் முற்றாக எரியூட்டப்பட்டுள்ளதுடன், 41 வாகனங்களும், 65 வீடுகளும் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles