காலி முகத்திடலுக்கு உணவு எடுத்துச் செல்ல தடை விதிக்கும் இராணுவம் 🎥

காலி முகத்திடலில் அமைதி வழியில் அரச எதிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டுவரும் இளைஞர் யுவதிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் ஒருவரை இராணுவத்திரனர் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் ஒரு ஆணும், பெண்ணும் வழி மறித்த இராணுவத்தினரிடம் தமது ஆதங்கங்களை வெளியிட்டிருக்கிறார்கள். வாகனத்தை திறந்து தாம் உணவுப் பொருட்கள்தான் எடுத்துச் செல்கிறோம் என இராணுவத்தினருக்குத் தெளிவாகக் காட்டுகிறார்கள்.

இருப்பினும் இராணுவத்தினர் அவர்களை தொடர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலை தொடர்ந்தால் காலி முகத்திடலில் உள்ள இளையோரின் நிலை சிக்கலுக்குள்ளாகும். உணவில்லாவிடின் போராட்டக்காரர்கள் தாமாகவே காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவார்கள் என்ற நோக்கத்தில், மேலிடத்து உத்தரவின் பேரில் உணவு கொண்டு செல்வதை தடை செய்திருக்க வாய்ப்புள்ளது. ஆயினும் சீருடைத் தரப்பின் இந்தச் செயலானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதேவேளை, இலங்கையின் பல பாகங்களிலும் இராணுவத்தின் பிரசன்னம் பல மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. கவச வாகனங்களில் இராணுவத்தினர் ரோந்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles