அனைத்து அரச ஊழியர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்

வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் கட்டாயமாக முழுமையான கொரோனா தடுப்பூசி பெற்றிருக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவுறித்தியுள்ளது.

அரச நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் முழுமையான தடுப்பூசி பெற்றுள்ளார்களா என அறியும் உரிமை பொது மக்களுக்கு உண்டு எனத் தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண, அரச அலுவலகர்கள் எவராவது தடுப்பூசி பெற்றிருக்கவில்லை என தெரிந்தால், உடனடியாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடுப்பூசி பெறாத அரச அலுவலர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles