தபால் மூலம் வாக்களிக்க மேலும் இரண்டு தினங்கள்

இலங்கையின் பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றவர்களுக்கு மேலதிகமாக இரண்டு தினங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்,

இதன்பிரகாரம் தகுதி பெற்ற தபால் மூல வாக்காளர்கள், வரும் 24ம் திகதி (24/07) காலை 08:30 இலிருந்து மாலை 04:00 மணிவரையும், 25ம் திகதி (25/07) காலை 08:30 இலிருந்து 02:00 வரையும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தமது வாக்குகளைப் பதிவு செய்யலாம்.

ஏற்கனவே தபால் மூல வாக்களிப்பு கடந்த 13,14,15,16 மற்றும் 17ம் திகதிகளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles