பொதுவாக காய்ச்சல் ஏற்படும்போது பயன்படுத்தப்படும் பரசிட்டமோலின் பாவனை கடந்த மூன்று வாரங்களில் 275% ஆல் உயர்ந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள ஒமிகுரோன் பரவல் மற்றும் டெங்கு தொற்றால் பலருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே பரசிட்டமோலின் பாவனையும் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பரசிட்டமோலின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளாதால், வரும் வாரங்களில் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.