15 வயதில் தேசிய அடையாள அட்டை கட்டாயம்

இலங்கையில் 15 வயதைப் பூர்த்தி செய்த தினத்திலிருந்து ஒரு வருடத்திற்குள், தேசிய அடையாள அட்டையை (NIC) கட்டாயம் பெற்றிருக்க வேண்டுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், இரட்டைக் குடியுரிமை சான்றிதழ் பெற்ற ஆறு மாதங்கள் நிறைவடைவதற்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேற் குறிப்பிட்டபடி, உரிய கால எல்லைக்குள் விண்ணப்பிக்கத் தவறுபவர்களுக்கு ரூபாய் 2,500 அபராதம் விதிக்கப்படும் எனவும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles