சூதாட்ட நிலையங்கள் 7 வருடங்களாக வரி செலுத்தவில்லை – ஹர்ஷா

இலங்கையில் உள்ள 4 பிரதான கசினோ சூதாட்ட நிலையங்கள் கடந்த 7 வருடங்களாக வரி செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

கசினோ சூதாட்ட நிலையங்களிலிருந்து அறவிடப்படவேண்டிய சுமார் 200 மில்லியன் ரூபாய் வரியை முறையாக அறவிட்டால், தனிநபர் வருமான வரியை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம், தனிநபர் வருமான வரியை அதிகரிப்பதன் மூலம் 68 பில்லியன் ரூபாயை வருமானமாகப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரபலமானவை