வரவு செலவு திட்டம் – பாதுகாப்பு துறைக்கு குறைந்த ஒதுக்கீடு!

2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், சுகாதாரத் துறை, கல்வித் துறை மற்றும் சமூக பாதுகாப்புத் துறைக்கு போதியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர் முடிவுற்ற பின்னரும், பாதுகாப்புத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தேவையற்ற விதத்தில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டு வந்தமையும் இலங்கை பொருளாதாரரீதியில் வீழ்ச்சியடைவதற்கு ஒரு காரணமாக இருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles