நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகும் 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்

இலங்கை சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் இன்று நள்ளிரவு தமது பதவிகளை துறந்து, அரசாங்கத்தில் இருந்து விலகுகின்றனர். இவர்களது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவர்கள் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் அங்கம் வகித்திருந்ததுடன், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர்.

வருடப்பிறப்பின் பின்னர் கூடவுள்ள பாராளுமன்றில், இவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள்.

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியில் இணையாமல் தனித்து இயங்கப்போவதாக குறிப்பிட்டுள்ள இந்த அணியினர், பெரும்பாலும் கூட்டு எதிர்க்கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles