ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பாரிய மக்கள் ஊர்வலம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிகளை அரசு முறையாகக் கையாளத் தவறியுள்ளதால், மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதனை கண்டித்து சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியான சமகி ஜன பலவேகய (SJB) பாரிய ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்றை கொழும்பில் மேற்கொண்டு வருகிறது.

பெரும் எண்ணிக்கையான மக்கள் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றியுள்ளனர். கொழும்பு பொது நூலகத்திற்கு அண்மையிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம், ஜனாதிபதி செயலகத்தை சென்று அடைந்துள்ளது. 

ஆர்ப்பாட்டத்தில் வந்தவர்களினால் வெறுமையான பிரேதப் பெட்டி ஒன்றும் ஜனாதிபதியின் செயலகத்தினுள் வீசப்பட்டுள்ளது. ஜனாதிபதியை வெளியே வந்து மக்களைச் சந்திக்கும்படி சத்தமிட்டபடி மக்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தை சுற்றி விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles