சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்த செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரான சுமந்திரனுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

மகிந்தவின் ஆட்சி முடியும் தருவாயில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசில் இருந்து விலகுவதாக, சுமந்திரன் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்திற்கு பதில் அளிக்கும் விதத்திலேயே செந்தில் தொண்டமான் சவால் விடுத்துள்ளதுடன், சில குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளார்.

👉 நீங்கள் 12 வருடங்களாக 13ம் திருத்தச் சட்டத்தைப் பற்றி பேசுகிறீர்கள், ஆனால் உங்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை
👉 கடந்த நல்லாட்சி அரசிற்கு ஆதரவளித்த உங்களால், சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை
👉 நீங்கள் உங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையை, முடிந்தால் நான் மாகாணசபை அமைச்சராக இருந்தபோது மக்களுக்கு ஆற்றிய சேவையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வாருங்கள்
👉 இரவில் பிரதமரையும், ஜனாதிபதியை சந்திக்கும் உங்களால், மக்களின் பிரச்சனை பற்றிப் பேச முடியவில்லை

மேலும் கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியுடன் 20 வருடங்களும், மகிந்த அரசுடன் 15 வருடங்களும் பணியாற்றியுள்ளோம். மக்களுக்கு சேவையாற்றுவதே எமது பிரதான நோக்கமே தவிர, யார் ஆட்சியாளர்கள் என்பதல்ல என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles