கடந்த வருடம் (2021) இலங்கையின் இரத்தினபுரி பிரதேசத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட நீல இரத்தினக் கல் (Sapphire) உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
சுமார் 503.2kg உடைய அந்த நீல இரத்தினக் கல், உலகின் பெரிய நீலக் கல் என சாதனை படைத்துள்ளது. இந்த் நீல இரத்தினக் கல்லின் பெறுமதி ஏறக்குறைய 2,000 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.