காலிமுகத்திடல் கலவரத்தை வழிநடத்தியவரின் வீடு தீக்கிரை

இன்று(09/05) காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகளை நெறிப்படுத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரின் வீடு முற்றாக தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்த எனப்படும் பல குற்றவியல் பின்னணியுள்ளவரின் வீடே முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம இளைஞர்கள் தாக்கப்படும்போது, பல இளைஞர்கள் சனத் நிஷாந்த அங்கு இருப்பதாகவும், அவரே கலவரத்தை வழி நடத்துவதாகவும் நேரலையில் தெரிவித்திருந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles