இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய அமைதி கூட்டணிக்கு மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணி, ரௌப் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய தமது பூரண தெரிவித்துள்ளன.
மூன்று தலைவர்களும் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், வரும் பாரளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வலுவானதொரு கூட்டணியை உருவாக்கும் பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேவும், தற்போதைய அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாமல் முற்றாக வேறு ஒரு திசையில் சென்றுகொண்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளதுடன், வரும் பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தை தோற்கடித்து, தாம் வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்த்துள்ளனர்.
சஜித்தினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணி, வரும் தேர்தலில் மகிந்த அணியை மட்டுமின்றி, ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியையும் எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது