எவ்வித குற்றமும் செய்யாமல், பல ஆண்டுகளாக சிறையில் வாடும் பல தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அக்கறை காட்டாத இலங்கை ஜனாதிபதி, மரண தண்டனை பெற்ற ஒரு கைதி ஒருவருக்கு விடுதலை வழங்கி தனது குரூர மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
2005ல் சுவீடன் நாட்டு பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக, 2012ல் மரண தண்டனை பெற்ற சிங்கள கைதி ஒருவரின் விடுதலைக்கே இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அனுமதி வழங்கியுள்ளார்.

வெகு விரைவில் பதவிகாலம் முடிவடைய உள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட இந்த இழிவான செயலால் இலங்கையின் நீதி துறையே கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய வெற்றி பெற்றால், எத்தனை குற்றவாளிகள் விடுவிக்கப்படுவார்கள் என்பதே தற்போது அனைவரின் மனதிலுமுள்ள அச்ச உணர்வாகும்.