பதில் ஜனாதிபதியாக ரணில் இன்று பதவியேற்பார் !!

இலங்கை ஜனாதிபதியின் இராஜினாமாக் கடிதம் இன்று சபாநாயகரால் வெளியிடப்பட்டபின்னர், ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்பார் எனத் தெரியவருகின்றது.

இலங்கை அரசியல் யாப்பின்படி, பதவிக்காலம் முடியும் முன்னர் ஜனாதிபதி பதவி விலகினால், பிரதமராக பதவி வகிப்பவரே ஜனாதிபதியாக பதவியேற்க முடியும். இதனடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் இன்று பதவி ஏற்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் ஆசீர்வாதம் பெற்ற ரணில் விக்ரமசிங்க பல முறை பிரதமராகப் பதவி வகித்துள்ளபோதும், ஒரு முறையேனும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து பிரதமர் பதவி பெற்ற ரணிலும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி இலங்கை மக்கள் #GoHomeRanil என கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருவதுடன், அவரின் வீடும் அண்மையில் தீக்கிரையாகப்பட்டதும் யாவரும் அறிந்ததே.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles