ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால், படைப்பலம் பிரயோகிக்கப்படும் – ரணில்

இன்னொரு மக்கள் ஆர்ப்பாட்டம் மூலம் ஆட்சியைக் கலைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (23/11) பாராளுமன்றில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

இலங்கை காவல்துறையினரிடம் அனுமதி வாங்கி, பொது மக்களுக்கு இடையூறு இன்றி எவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என தெரிவித்த ஜனாதிபதி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் அனுமதிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் ஆர்ப்பாட்டங்களை அடக்க இராணுவத்தினரைப் பயன்படுத்த தயங்கப்போவதில்லை எனவும், தேவைப்படின் அவசரகாலச் சட்டத்தையும் அமுல்படுத்துவேன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles