தனியார் பேருந்து போக்குவரத்துச் சேவைகளில் சிக்கல்!

இலங்கையில் பேருந்து உதிரிப் பாகங்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தனியார் பேருந்து சேவைகளில் தடங்கல் ஏற்படுமென தனியார் பேருந்து சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் வாரத்திலிருந்து சேவைகளை இடைநிறுத்தவேண்டி வருமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேருந்து உதிரிப்பாகங்களான டயர், பிரேக் லைனர் மற்றும் பற்றரி போன்றவற்றிற்கு பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பேருந்துகள் ஏற்கனவே சேவைகளில் ஈடுபடுத்தப்படாமல் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles