இலங்கையில் எல்லை மீறிப் போயுள்ள அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் கண்மூடித்தனமான விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்களைப் பதுக்குதல், அதிக விலைக்கு விற்றல் போன்ற செயற்பாடுகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல், அரிசி, சீனி என்பவற்றை அரசாங்கம் கொள்வனவு செய்து நியாய விலைக்கு மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான அத்தியாவசிய சேவைகள் ஆணையாளராக மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்ல ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் பெரும்பாலான மக்கள் சிவில் சேவைகளை மேற்கொள்ள, தொடர்ந்தும் இராணுவ அதிகாரிகளையே ஜனாதிபதி நியமித்து வருகின்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.