அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 25 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு செலுத்தும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015இல் வர்த்தகர் ஒருவரைப் பயமுறுத்தி பணம் பெற முயற்சித்த குற்றச்சாட்டிற்காகவே கொழும்பு உயர் நீதிமன்றம் மேற்படி தண்டனையை விதித்துள்ளது. இந்த வழக்கிலிருந்து பிரசன்ன ரணதுங்கவின் மனைவி அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.