காவல்துறை ஊரடங்கு தளர்த்தப்பட்டது

இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நேற்று (21/04) நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் விளைவாக அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு இன்று காலை ஆறு மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.

நாடு மீண்டும் வழமையான செயற்பாடுகளுக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புகையிரத நிலையங்கள், வைத்தியசாலைகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் பாரிய சோதனைகள் இடம்பெற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

215 மனித உயிர்களைக் காவுகொண்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களுடன் தொடர்புடைய பதின்மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளபோதிலும் மேலதிக தகவல்கள் எதனையும் பாதுகாப்பு அமைச்சு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles