உலக சாதனையுடன் இலங்கைக்கு தங்கம்

ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இலங்கை முதன் முதலாக தங்கம் வென்றுள்ளது.

ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை நிகழ்த்தி தினேஷ் பிரியந்த தங்கம் வென்றுள்ளார்.

ஈட்டி எறிதலில் 2016ம் ஆண்டு பிறேஸில் ரியோவில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் ஏற்படுத்தப்பட்ட உலக சாதனையை (63.97m), பிரியந்த 67.79m தூரத்திற்கு எறிந்து முறியடித்துடன், புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியில் கடமை புரிந்த தினேஷ் பிரியந்த, 2008ம் ஆண்டு கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதலில் படுகாயமுற்று ஊனமடைந்தார். பின்னர் மாற்றுத் திறனாளிகளிற்கான விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் காட்டி, பல நாடுகளில் இடம்பெற்ற போட்டிகளில் தங்கம் வென்றிருந்தார்.

Latest articles

Similar articles