இலங்கையில் 500mg பரசிட்டமோல் ஒன்றின் அதிகபட்ச விலை ரூ.2.30 என அறிவித்து விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலின் பின்னர் இலங்கையில் பரசிட்டமோலுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வந்ததுடன், கறுப்பு சந்தையில் பெரும் விலைக்கு விற்கப்பட்டும் வந்தது. இதனையடுத்து அரசாங்கம் அடிப்படை வலி நிவாரணியான பரசிட்டமோலின் விலைக்கட்டுப்பாட்டை அறிவித்து வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
