ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மூவரை உள்ளடக்கிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற அரச செல்வீனங்களை குறைப்பதற்கும், அமைச்சின் செயலாளர்கள் மூலம் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கும் முகமாக இந்த அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விஜித ஹேரத் ஆகிய மூவருக்குமிடையில் அனைத்து அமைச்சுப் பொறுப்புக்களும் பகிரப்பட்டுள்ளது.
நிதி, பாதுகாப்பு உட்பட மிக முக்கிய அமைச்சுக்கள் ஜனாதிபதிவசமே உள்ளது. நீதி, கல்வி, மாகாண சபைகள் உள்ளிட்ட பல அமைச்சுக்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடமும், வெளிவிவகாரம், புத்த சாசனம் உள்ளிட்ட பல அமைச்சுக்கள் விஜித ஹேரத்திடமும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.