நியூ யோர்க் டைம்ஸ் vs மஹிந்த ராஜபக்ச

அமெரிக்காவின் பிரபல நாளிதழ்களில் ஒன்றான நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்திற்காக சீன அரசிடம் பணம் பெற்றதாக அண்மையில் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த செய்தியில் ஒரு துளியளவேனும் உண்மை இல்லை என்றும், அந்த செய்தியை வெளியிட்டு தனக்கு பெரும் அவதூறு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

உண்மைக்கு புறம்பான செய்தியை வெளிட்ட நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை மீது எனது சட்டத்தரணிகள் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles