நீர்கொழும்பில் நேற்று (05/04) இடம்பெற்ற குழு மோதல் வன்முறையாக மாறி, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

நிலமையைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் விமானப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பு பிரதேசத்தில் காவல்துறை ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தேவையற்ற வதந்திகள் பரவுவதைத் தடுக்க இலங்கையில் மீண்டும் சமூகவலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
