இரத்தினபுரி மாவட்டத்தில் மண் சரிவு அபாய எச்சரிக்கை, நாவலப்பிட்டி நகரில் கடும் வெள்ளம்

தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக எஹெலியகொட, எலபத, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடும் மழை காரணமாக நாவலப்பிட்டி நகர் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. சில இடங்களில் இரண்டு அடிக்கும் மேல் வெள்ளம் காணப்படுகிறது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles