பால் தேநீர் 100 ரூபாய் 😥

இன்று (21/03) முதல் இலங்கையில் ஒரு குவளை பால் தேநீரின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா, சீனி, தேயிலை போன்ற பொருட்களின் விலை அதிகரிப்பினால், பால் தேநீரின் விலையும் அதிகரிக்கப்படுகிறது என தெரிவித்துள்ள இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கம், தற்போதைய விலை அதிகரிப்பின்படி சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள், மூன்று தேக்கரண்டிகள் பால்மாவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 200ml இற்கு மேற்படாத ஒரு குவளை தரமான பால் தேநீரை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles