மெக்சிகோவில் 12 வருடங்களில் 2 லட்சம் பேர் கொலை

போதைப் பொருள் வர்த்தகத்தின் போட்டி காரணமாக மெக்ஸிகோவில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகின்றனர்.

நேற்று மெக்சிகோவின் வெராகர்ஸ் மாகாணத்தில் இருந்த புதைகுழியில் 168 மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த வருடம் இன்னொரு புதைகுழியில் 250 மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஒரு அதிகாரி, “இவ்வாறு இடம்பெறும் பெரும் கொலைகளால் மெக்சிகோ நாடே சுடுகாடாக மாறி வருகிறது” என்றார்.

கடந்த வருடம் (2017) 40,000 பேர் வரையில் காணாமல் போயிருந்தனர். இதில் 30,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கடந்த 2006 முதல் இதுவரை 2 லட்சம் பேர் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வியாபாரப் போட்டி காரணமாக கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன!

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles