கொழும்பில் அரசிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

கொழும்பு மருதானை பகுதியில் நேற்று (02/11/22) அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

பல தொழிலாளர் சங்கங்கள், 150 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக எதிர்க் கட்சி உட்பட பல அரசியல் கட்சி உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

அடக்குமுறையை நிறுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு” என்ற கோரிக்கையே ஆர்பாட்டத்தில் முக்கிய கோரிக்கையாக இடம்பெற்றிருந்தது. மருதானையில் ஆரம்பித்து புறக்கோட்டைவரை செல்ல முற்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியை காவல்துறையினர் புறக்கோட்டை சந்தைக்கருகே தடுத்து நிறுத்தினர்.

இதனால் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுக்க முடியாது என உணர்ந்த எதிக்கட்சித் தலைவர் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் ஆர்ப்பாட்டத்தை விட்டு வெளியேறினர். இருப்பினும் ஹிருணிகா பிரேமசந்திரா மக்களுடன் இறுதிவரை நின்று ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles