அரசாங்கம் சகிக்க முடியாத ஒடுக்குமுறையில் ஈடுபடுகிறது – கர்தினல் மல்கல் ரஞ்சித்

இலங்கை அரசாங்கம் சகிக்க முடியாத ஒடுக்குமுறையில் ஈடுபடுகிறது என கர்தினல் மல்கல் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் ஆட்சிமுறை சர்வதேச நியமங்களிற்கு ஏற்ப இடம்பெறுகின்றதா என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை (UNHRC) உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை ஆட்சியாளர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு, அரசியல் சக்திகள் முன்வைத்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த கடும் முயற்சி செய்கிறார்கள் எனவும் கர்த்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் குற்றம் சுமத்தினார்.

Latest articles

Similar articles