மகிந்த ஆட்சிக்காலத்தில் 10,000 பில்லியன் ரூபாய் மாயம் – ரணில்

கடந்த மகிந்த ஆட்சிக்காலத்தில், 2008 முதல் 2015 வரையான காலப்பகுதியில் 10,000 பில்லியன் ரூபா மாயமாகியுள்ளது. இந்த 10,000 பில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்ததென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார்.

இதில் அதிமாக ஊழியர் சேமலாப நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4000 பில்லியன் ரூபா, நிதிச் சபையின் அனுமதியின்றி ஏலத்தில் விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

10,000 பில்லியன் ரூபாவை திருடியது யாரென கண்டுபிடிக்க வேண்டும். இது பற்றி நடவடிக்கை எடுக்க தானும் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

Latest articles

Similar articles