நாளை பூரண சந்திர கிரகணம்

நாளை (08/11) பூரண சந்திரகிரகணம் இடம்பெறவுள்ளது.

இலங்கையர்கள் சந்திரகிரகணத்தின் இறுதிப்பகுதியை காணக்கூடியதாக இருக்குமென கொழும்பு பல்கலைக்கழக பெளதீக விஞ்ஞானப் பிரிவின் ஆய்வுப் பிரிவு தலைவர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை நேரப்படி சந்திர கிரகணம் நேர விபரங்கள் பின்வருமாறு,
ஆரம்ப நேரம் : பகல் 1.30
முழுமை அடையும் நேரம் : மாலை 4.29
முடிவடையும் நேரம் : மாலை 7.26

இலங்கையின் கிழக்கு திசையில் மாலை 5.48இன் பின்னரே சந்திரன் தோன்ற ஆரம்பிப்பதால், இலங்கையர்கள் கிரகணத்தின் இறுதிப் பகுதியைக் காணக்கூடியதாக இருக்கும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles