மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நேற்று(21/01) மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, உடனடியாகவே தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய சீரற்ற பொருளாதார நிலையை காரணம் காட்டி, தேர்தலை பிற்போட வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகின்றபோதிலும், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் தேர்தல் நடைபெற வேண்டுமென விரும்புவதாக தெரிய வருகின்றது.

8,000 இற்கும் அதிகமான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு, 12 பில்லியன் ரூபாய் வரையில் செல்வு ஏற்படுமென கணிக்கப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles