கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கில் கால்நடைகள் பலி

தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுவரை(09/12) 165 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன.

கடும் காற்றுடன் கூடிய மழையினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்தமையாலேயே மேற்படி கால்நடைகள் பலியாகியுள்ளன. சீரற்ற காலநிலை தொடர்வதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியால் பாதிப்படைந்துள்ள மக்களை தற்போது சீரற்ற காலநிலையும் கடுமையாகத் தாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரபலமானவை