ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி விநியோகம் இடைநிறுத்தம்

இலங்கையில் மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி விநியோகங்களை உடனடியாக நிறுத்தும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த இரு நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கில் கால்நடைகள் சடுதியாக உயிரிழந்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு இறைச்சி விநியோகங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கால்நடைகளின் சடுதியான உயிரிழப்பைத் தொடர்ந்து, மாவட்ட கால்நடை புலனாய்வு நிலையங்கள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இறந்த கால்நடைகளின் மாதிரிகளும் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.

பிரபலமானவை