இரு நாட்களில் 7,200 மெ.தொ எரிவாயு இலங்கையை வந்தடையும்

இன்று(26/04) 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் (LP Gas) கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளது என லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் வரும் 28ம் திகதி, இன்னுமொரு கப்பல் 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் வந்தடையவுள்ளது. மேற்குறித்த இரு கப்பல்களுக்குமான பணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதால், உடனடியாகவே எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படுமென லிற்றோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொள்வனவு விலையவிட குறைந்த விலையில் எரிவாயுவை விநியோகிக்க வேண்டியுள்ளதால், நாளாந்தம் 25 கோடி ரூபாய்கள் நட்டம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles